நடைப்பயணத்தில் ராகுல் காந்தியை குண்டு வைத்து கொல்வேன் - கடிதம் எழுதிய முதியவர் கைது.! - Seithipunal
Seithipunal


நடைப்பயணத்தில் ராகுல் காந்தியை குண்டு வைத்து கொல்வேன் - கடிதம் எழுதிய முதியவர் கைது.!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமாரியில் இருந்து நடைபயணம் மேற்கொண்டார். இதன் படி ராகுல் காந்தி கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் தேதி இந்தூரை அடைந்து அதன் மறுநாளே உஜ்ஜைன் மாவட்டத்திற்கு சென்றார். 

இதற்கிடையே இந்தூரில் உள்ள இனிப்பு கடைக்கு கொலை மிரட்டல் கடிதங்கள் வந்தன. அதில், இந்தூரில் பாரத் ஜோடோ நடைபயணத்தின் போது ராகுல் காந்தி மற்றும் கமல் நாத் உள்ளிட்ட இருவரும் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்படுவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதைப்பார்த்த இனிப்பு கடைக்காரர்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீசார் அந்த கடிதங்கள் குறித்து விசாரணை நடத்தினர். அதில் கடிதங்களை அனுப்பியவர் தயாசிங் என்கிற ஐஷிலால் ஜாம் என்று தெரியவந்துள்ளது. 

இதைத் தொடர்ந்து போலீசார் கொலை மிரட்டல் விடுத்த நபரைத்  தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், போலீசார் ரயில் மூலம் வெளியூருக்குத் தப்ப இருந்த ஜஷிலால் ஜாமை கைது செய்தனர். இதையடுத்து போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

old man arrested for wrote kill letter to ragul gandhi in indhoor


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->