பாடையில் தூக்கிச் சென்றபோது திடீரென எழுந்து உட்கார்ந்த முதியவர் - ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள, ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ஜிசிகடம், சுதம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அப்பாராவ். வயது முதிர்வு காரணமாக உடல்நல குறைவால் அவதி அடைந்து வந்த இவரை அவரது உறவினர்கள் ஸ்ரீகாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

நீண்ட நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அப்பாராவ் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததனால் மருத்துவர்கள் அப்பாராவை வீட்டிற்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்தனர். அதன் படி அப்பாராவை அவரது உறவினர்கள் ஆம்புலன்சில் கொண்டு வந்தனர். 

வரும் வழியில் அவரது உடல் அசையாததால், அப்பராவ் இறந்து விட்டதாக கருதி அவரது குடும்பத்தினர் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட அப்பாராவ் உடலை பார்த்து அனைவரும் கதறி அழுதனர். 

தொடர்ந்து இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இறுதியாக அப்பாராவின் உடலை கழுவி சுத்தம் செய்து சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்வதற்காக அவரது உடலை பாடையில் தூக்கி வைத்துத் தூக்கி சென்றனர்.

அப்போது அப்பாராவ் திடீரென கண் திறந்து, கால்களை அசைத்தபடி எழுந்து உட்கார்ந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் உடனடியாக படையை கீழே வைத்து அப்பாராவை கீழே இறக்கினர். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
----------------------------------


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

old man suddenly woke up after death in andira


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->