விபத்தில் சிக்கிய மூதாட்டி! அடுத்த நொடியே போலீஸ்காரர் செய்த சம்பவம் - குவியும் பாராட்டுக்கள்! - Seithipunal
Seithipunal


மும்பையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்த சாலையில் 62 வயதான மூதாட்டி ஒருவர் நடந்து சென்றுள்ளார். 

அந்த மூதாட்டியின் கணவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரைப் பார்ப்பதற்காக சென்று உள்ளார். 

அப்போது சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனம் ஒன்று மோதியதில் மூதாட்டி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். 

இதனைப் பார்த்த அங்கிருந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீஸ்காரர் வக்சவுரே மற்றும் காவலர்கள்  விரைந்து சென்று, 108 அவசர ஊர்திக்கு போன் செய்துள்ளனர். 

இந்த நிலையில் அவசர ஊர்தி வர தாமதமாகியதால் போலீஸ்காரர் வக்சவுரே படுகாயம் அடைந்த மூதாட்டியை தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்து அவரின் உயிரை காப்பாற்றியுள்ளார். 

மூதாட்டியை அவர், தூக்கி சென்று புகைப்படம் தற்போது ட்விட்டரில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த பலரும் போலீஸ்காரர் வக்சவுரேக்கு பாராட்டு தெரிவித்தும் தங்களது கருத்துக்களை பகிர்ந்தும் வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

old woman involved accident policeman picked up hospital 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->