காஷ்மீரிகள் பிச்சைக்காரர்களா.? ஒமர் அப்துல்லா அதிரடி பேச்சு.!  - Seithipunal
Seithipunal


இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓமர் அப்துல்லா, " சமீபத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களை அடுத்து கிராம பாதுகாவலர்களுக்கு ஆயுதம் வழங்கும் முடிவை அரசு எடுத்துள்ளது. இந்த விஷயம் அவர்களுடைய நிர்வாக தோல்வியை எடுத்துரைக்கிறது. 

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ நீக்கினார்கள். அப்போது காஷ்மீரில் துப்பாக்கி இனி இருக்காது என அவர்கள் கூறினார்கள். இருப்பினும் நாளுக்கு நாள் பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கைகளை பார்க்கும் பொழுது நிலைமை மோசமாக இருக்கிறது என்பதை காட்டுகிறது.  

காஷ்மீர் மக்களின் உரிமை தான் தேர்தல். காஷ்மீரில் தேர்தல் நடக்க வேண்டும் என பாஜக விரும்பினால் அதை நாங்கள் வரவேற்போம். நடத்த வேண்டாம் என்று நினைத்தால் அவர்கள் நினைப்பது போல செயல்படட்டும். இதற்காக காஷ்மீர் மக்கள் மத்திய அரசிடம் சென்று மன்றாட முடியாது. 

ஏனெனில் காஷ்மீர் மக்கள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் இல்லை. ஒருவேளை தேர்தல் நடந்தால் புதிய அரசனது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முயற்சிக்கும் என பாஜக தலைமைக்கு நன்றாக தெரியும். எனவே தான் அவர்கள் இப்படி செய்கிறார்கள்." என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Omar Abdullah speech very Angry


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->