#BREAKING || இந்தியாவில் தீயாய் பரவும் ஒமைக்ரான்.! ஒரே நாளில் இத்தனை பேருக்கா?
OMICRON IN INDIA REPORT DEC 31
இந்தியாவில் ஒமைக்ரான் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,270 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று 961 ஆக இருந்த ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை, ஒரே நாளில் 1,270ஆக அதிகரித்து உள்ளது.
மேலும், நாட்டின் 23 மாநிலங்களில் ஒமைக்ரான் நோய்த்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 450 பேர் ஒமைக்ரான் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாவதாக தலைநகர் டெல்லியில் 320 பேர் ஒமைக்ரான் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் 109 பேரும், குஜராத் மாநிலத்தில் 97 பேரும், ராஜஸ்தான் மாநிலத்தில் 69 பேரும், தெலங்கானா மாநிலத்தில் 62 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் நம் தமிழகத்தில் 46 பேர் ஒமைக்ரான் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கர்நாடகா மாநிலத்தில் 34 பேரும், அரியானா மாநிலத்தில் 14 பேரும், மேற்கு வங்கம் மாநிலத்தில் 11 பேரும், மத்திய பிரதேசம் மாநிலத்தில் 9 பேரும், ஒடிசா மாநிலத்தில் 14 பேரும், ஆந்திரா மாநிலத்தில் 16 பேரும், உத்தரகாண்ட் மாநிலத்தில் 4 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சண்டிகர் - 3, காஷ்மீர் - 3, உ.பி., அந்தமான் - தலா 2 பேருக்கும், கோவா, இமாச்சல பிரதேசம், லடாக், பஞ்சாப், மணிப்பூரில் தலா ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
English Summary
OMICRON IN INDIA REPORT DEC 31