சென்னை வழியாக ஆந்திரா சென்ற பெண்ணுக்கு ஒமைக்ரான் உறுதியானது.!
Omicron Virus In Andhra
இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவி கொண்டு இருக்கிறது. நாட்டில் முதல் பாதிப்பு, கர்நாடக மாநிலம் பெங்களூர் மருத்துவர் உள்பட 2 பேருக்கு கண்டறியப்பட்டது.
அதனை தொடர்ந்து, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, கேரளா, ஆந்திரா, சண்டிகர், தெலுங்கானா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது.
ஒட்டுமொத்தமாக பார்த்தால் மகாராஷ்டிரா, டெல்லி மாநிலத்தில் அதிக பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 200 பேருக்கு மைக்ரான் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் எழுபத்தி ஏழு பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆந்திராவில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கென்யா நாட்டில் இருந்து ஆந்திராவுக்கு வந்த 39 வயது பெண்ணுக்கு ஒமைக்ரான் வகை கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது என்று அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
கென்யா நாட்டில் இருந்து வந்த அந்தப் பெண் சென்னை வழியாக ஆந்திரா வந்துள்ளதாகவும் மாநில சுகாதாரத்துறை அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.