மரத்தில் கட்டு கட்டாக கட்டிவைக்கப்பட்ட பணம் - அதிகாரிகள் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


மரத்தில் கட்டு கட்டாக கட்டிவைக்கப்பட்ட பணம் - அதிகாரிகள் பறிமுதல்.!

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வந்துள்ளது. அதன் படி வருமான வரித்துறையினர் மாநிலம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், வருமான வரித்துறையினர் புத்தூர் தொகுதியில் போட்டியிடும் சுப்ரமணிய ராயின் இல்லத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சுப்ரமணிய ராயின் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் அடுக்கி மரத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதுவரைக்கும் கர்நாடக மாநிலத்தில் ரூ. 110 கோடியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த பணம் பறிமுதல் தொடர்பாக இதுவரைக்கும் 2 ஆயிரத்து 346 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ளதால் மாநிலம் முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one crore seized in karnataga


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->