மைசூர் அரண்மனையில் பரபரப்பு!! வெடித்த பீரங்கி குண்டல் ஒருவர் படுகாயம்!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் தசரா கொண்டாட்டம் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கிய நிலையில் நாளையுடன் நிறைவு பெறுகிறது. அதன்படி கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் அரண்மனையில் நடைபெறும் தசரா விழாவானது உலகப் புகழ்பெற்றது.

இந்த தசரா விழாவின் நிறைவு நாளில் சாமுண்டீஸ்வரி அம்மன் இடம் பெற்றுள்ள 250 கிலோ எடை கொண்ட யானை அம்பாறி துவக்க விழாவானது மைசூர் தசரா விழாவின் சிறப்பம்சமாகும். இதில் ஏராளமான யானைகள் ஊர்வலமாக அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

இந்த நிகழ்வின் போது மன்னர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கிகளை கொண்டு 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்படும். இதற்கான பயிற்சிகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று மாலை பழைய பீரங்கி மூலம் பயிற்சி மேற்கொள்ளப்பட்டிருந்த போது திடீரென எதிர்பாராத விதமாக ஒரு குண்டு முன்னதாகவே வெடித்ததால் அருகில் இருந்த ஊழியர் படுகாயம் அடைந்தார். 

இந்த சம்பவத்தில் அந்த ஊழியரின் வலது கை முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. இதனை கண்ட சக ஊழியர்கள் தீயை அணைத்ததோடு அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தில் அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில் திட்டமிட்டபடி தசரா விழா நடைபெறும் என விழா குழுவினர் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One injured in cannon blast at Mysore palace


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->