இளைஞர்கள் ஒரு லட்சம் பேருக்கு ட்ரோன் பைலட் ஆகும் வாய்ப்பு! மத்திய அமைச்சர் தகவல்.!
One lakh drone pilots need
வரும் காலங்களில் ஒரு லட்சம் ட்ரோன் பைலட்டுகள் தேவைப்படுவதாகவும் இது இளைஞர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு என்றும் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் நிகழ்ச்சியில் பங்கேற்ற விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய அரசு ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானம் துறையை வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கி கொண்டு செல்வதாகவும், இதற்காக மூன்று முக்கிய திட்டங்களை செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
முதல் திட்டம் கொள்கை சார்ந்ததாக இருக்கும் என்றும், கொள்கையை எவ்வளவு வேகமாக செயல்படுத்துகிறோம் என்பதை அனைவரும் அறிவார்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும், இரண்டாவது திட்டம் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் தொகையை உருவாக்குவது என்றும், மூன்றாவது திட்டம் ட்ரோன் துறையில் உள்நாட்டு தேவையை உருவாக்குதல் மற்றும் அதிகப்படுத்துதல் என்றும் தெரிவித்தார்.
இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதால் வரும் ஆண்டுகளில் மத்திய அரசுக்கு ஒரு லட்சம் ட்ரோன் பைலட்டுகள் தேவைப்படுவார்கள் என்றும், எனவே இளைஞர்களுக்கு இது மிகப் பெரிய வாய்ப்பாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ட்ரோன் பைலட் ஆக பணிபுரிய கல்லூரி பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை எனவும், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே ட்ரோன் பைலட் பயிற்சி பெறலாம் எனவும் தெரிவித்தார்.
மேலும் 2-3 மாத பயிற்சி பெறும் நபர் ட்ரோன் விமானியாக வேலை செய்யலாம் என்றும், இதற்கு மாதம் ரூ.30,000 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும் என்றும் அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.
English Summary
One lakh drone pilots need