தமிழகத்தில் ரூ.128 கோடியில் தொழிற்சாலை அமைக்க ஜப்பானுடன் அடுத்தடுத்து ஒப்பந்தம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ரூ.128 கோடியில் தொழிற்சாலை அமைக்க ஜப்பானுடன் அடுத்தடுத்து ஒப்பந்தம்.!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். 

அங்கு முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்றதுடன், பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் செய்து கொண்டார். அதன் படி இன்று ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம் இந்தியாவில் முதல்முறையாக அதிலும் தமிழகத்தில் புதிய தொழிற்சாலையை நிறுவிட, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

இந்த ஒப்பந்தம் தமிழகத்தில் ரூ.128 கோடி முதலீட்டில் ரத்த அழுத்த மானிட்டர்களுக்கான உற்பத்தி தொழிற்சாலையை நிறுவிட செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்த நிகழ்ச்சியில் தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் டாகுடோ இவனாகா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one more agreement with jappan for factory set up in tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->