#பஞ்சாப்: பதிண்டா ராணுவ முகாமில் மேலும் ஒரு வீரர் குண்டு பாய்ந்து உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் மேலும் ஒரு ராணுவ வீரர் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதிண்டா ராணுவ முகாமில் நேற்று அதிகாலை 04:35 மணி அளவில் திடீரென துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. இந்த பயங்கர துப்பாக்கி சூட்டில் பீரங்கிப் பிரிவின் நான்கு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த வீரர்கள் சாகர் பன்னே (25), கமலேஷ் (24), யோகேஷ்குமார் (24), சந்தோஷ் நகரல் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் கமலேஷ், யோகேஷ் குமார் தமிழகத்தை சேர்ந்தவர்கள். மற்ற 2 வீரர்கள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பதிண்டா ராணுவ முகாமில் மேலும் ஒரு ராணுவ வீரர் குண்டு பாய்ந்து இன்று உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று மாலை 4.30 மணியளவில் ராணுவ வீரர் தனது துப்பாக்கியுடன் குண்டு பாய்ந்த நிலையில் ராணுவ முகாமில் காயத்துடன் கிடந்தார். 

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். மேலும் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், தற்செயலான துப்பாக்கிச் சூடாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One more soldier killed in a shot at Bathinda army camp in Punjab


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->