ஒரே நாடு ஒரே தேர்தல் - நடைமுறைக்கு மாறானது! காங்கிரஸ் தலைவர் எதிர்ப்பு ! - Seithipunal
Seithipunal


ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த ஆய்வு மேற்கொண்ட நிலையில், குழுவின் பரிந்துரைகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு மாறானது என்று, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் கார்கே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஜனநாயகம் நிலைத்திருக்க வேண்டும் எனில், தேவைக்கேற்ப தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, மூத்த தலைவர் கே சி வேணுகோபால், தெரிவிக்கையில், அண்மைக்காலமாக நடக்கக்கூடிய சூழல்களின் கவனத்தை திசை திருப்பவே ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி பேசுவதாக குற்றம் சாட்டி உள்ளார். 

மத்திய அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் தெரிவிக்கையில், "ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக பல்வேறு கட்சிகள் ஆதரவளித்துள்ளன. எதிர்க்கட்சிகள் இப்போதே அச்சப்பட தொடங்கியுள்ளன. 

நாடு முழுவதும் கடந்த 1951 ஆம் ஆண்டு முதல் 1967ஆம் ஆண்டு வரை ஒரே நேரத்தில் தான் தேர்தல் நடைபெற்றது. 80 சதவீதம் பேர் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். பல்வேறு தரப்பினரிடமிருந்து விரிவான ஆலோசனை மேற்கொண்ட பிறகே பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது என்று அஸ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார் 

வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக மசோதா தாக்கல் செய்யப்படவும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One Nation One Election Congress


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->