ஒரே நாடு ஒரே தேர்தல் - பின்விளைவுகளை ஏற்படுத்தும் - டி.ராஜா பேட்டி!
One Nation One Election DRaja CPI
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த ஆய்வு மேற்கொண்ட நிலையில், குழுவின் பரிந்துரைகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் கார்கே இதற்க்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவிக்கையில், "ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு மாறானது. ஜனநாயகம் நிலைத்திருக்க வேண்டும் எனில், தேவைக்கேற்ப தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல் டெல்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா அளித்துள்ள பேட்டியில், "ஒரு நாடு, ஒரே தேர்தல்’ நடைமுறைக்கு பொருத்தமற்றது மற்றும் சாத்தியமற்றது.
தற்போதைய அரசியலமைப்பின் கீழ் இதனை முன்னெடுத்துச் செல்ல முடியாது என பல நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாடாளுமன்றம் கூடும் போது, ‘ஒரு நாடு, ஒரே தேர்தல்’ பற்றிய விவரங்களை பெற வேண்டும்.
‘ஒரு நாடு, ஒரே தேர்தல்’ ஏற்படுத்தும் பின்விளைவுகளை நாம் ஆராய வேண்டும்” என்று டி.ராஜா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, மூத்த தலைவர் கே சி வேணுகோபால், தெரிவிக்கையில், அண்மைக்காலமாக நடக்கக்கூடிய சூழல்களின் கவனத்தை திசை திருப்பவே ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி பேசுவதாக குற்றம் சாட்டி உள்ளார்.
English Summary
One Nation One Election DRaja CPI