தேசியக்கொடி ஏற்றும்போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


மத்தியபிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தில் உள்ள ஒரு கடையில் மூவர்ணக் கொடியை ஏற்றிக் கொண்டிருந்த நபர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் மத்தியபிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தில் உள்ள பர்வாஹா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நர்மதா சாலை பகுதியில் நேற்று மாலை நடந்தது. 

மோகன் படேல் என்ற 45 வயது நபர், நேற்று தன் கடையில் ஒரு இரும்பு கம்பியில் தேசியக் கொடியை ஏற்றியபோது அந்த கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்த மின் இணைப்பு கம்பியில், இரும்பு கம்பி உரசி மின்சாரம் பாய்ந்தது.

இதனையடுத்து அவருடைய உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One person died due to electric shock while hoisting the national flag


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->