"வாடகை வீட்டுக்காக கிட்னி விற்பனை." தீயாக பரவி சர்ச்சையை ஏற்படுத்திய போஸ்டர்.! - Seithipunal
Seithipunal


வாடகை வீட்டிற்காக கிட்னி விற்பனை என்ற போஸ்டர் தற்போது பெங்களூரு நகரை கலக்கி வருகின்றது.

பொதுவாகவே முக்கிய நகரங்களில் வாடகைக்கு வீடு கிடைப்பது என்பது குதிரை கொம்பாகத்தான் இருக்கும். அதிலும் முக்கிய நகரங்களில் இருக்கின்ற வீடுகளுக்கு அதிகப்படியான முன் பணம் மற்றும் வாடகை தொகை வசூலிக்கப்படுவது வழக்கம்.

மேலும், இப்படி வீடுகளை வாடகைக்கு விடும் உரிமையாளர்கள் போடும் கண்டிஷன்கள் மிகக் கொடுமையானதாக இருக்கும். அந்த வகையில், பெங்களூரு இந்திரா நகரில் வீடு கிடைப்பதில் இருக்கும் சிரமத்தை ஒரு நபர் போஸ்டராகவே அடித்து ஒட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த போஸ்டரில் வீட்டு உரிமையாளர்கள் கேட்கின்ற அதிகப்படியான முன் பணத்திற்காக அவரது இடது சிறுநீரகத்தை விற்க தயார் எனவும், அதை யாராவது வாங்கிக் கொண்டு எனக்கு உதவி செய்யுங்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

கிட்னியை வைத்து முன்பணம் செலுத்த வேண்டிய அளவிற்கு முன்பன தொகையானது அதிகப்படியாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்ட முயல்கிறார். இந்த போஸ்டர் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One person make poster For Selling Kidney For Rental house advance


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->