ஜம்மு-காஷ்மீரை யூனியன் பிரதேசம் என குறிப்பிடப்பதற்கு எதிர்க்கட்சிகள் விமர்சனம்; உமர் அப்துல்லா பதில்..! - Seithipunal
Seithipunal


ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) சட்டம் 2017, திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன்போது, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் என குறிப்பிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

இது குறித்து மக்கள் மாநாட்டு கட்சி உறுப்பினர் சஜாத் கானி லோன் கூறுகையில்,  இந்த மசோதாவை நிறைவேற்றியது, சட்டமன்றத்தால் ஜம்மு-காஷ்மீரை யூனியன் பிரதேசம் என அங்கீகரிப்பதாகிவிடும் என்று விமர்சித்தார். இதற்கு அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா பதிலளித்து கூறியதாவது:-

யூனியன் பிரதேசம் என மட்டுமே நாம் குறிப்பிட்டுள்ளோம். இதனால், எந்த மாற்றமும் நிகழ்ந்து விடாது என்றும், துரதிருஷ்டவசமாக, பாராளுமன்றத்தில் நம்முடைய மாநில அந்தஸ்தை திரும்பப்பெறும் வரை, நாம் தொடர்ந்து யூனியன் பிரதேசமாகத்தான் இருப்போம் என்றும், எனவே, இதை அரசியலாக்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் பெற வேண்டும் என்றும் அதை மீட்டெடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், யூனியன் பிரதேசம் என்ற வார்த்தையை நீக்குவது நம்முடைய யதார்த்தத்தை மாற்றாது என்றும், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் யூனியன் பிரதேசம்தான் என்று கூறியுள்ளார். இந்த அரசாங்கம் யூனியன் பிரதேசமாக ஆட்சி செய்கிறது என்று உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Opposition parties criticize Jammu and Kashmir designation as Union Territory Omar Abdullah responds


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->