முதல் நாளே ஆளும் கட்சிக்கு பயத்தை காட்டிய எதிர்கட்சிகள்! பாராளுமன்றத்தில் சட்ட புத்தகத்தை கையில் ஏந்தி அணிவகுப்பு! - Seithipunal
Seithipunal


பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், பாராளுமன்றத்தில் சட்ட புத்தகத்தை கையில் ஏந்தியபடி எதிர்க்கட்சி எம்.பிகள் அணிவகுப்பாக வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியும் எம்பிகளும் இந்தியா கூட்டணி எதிர்க்கட்சி எம்பிகளும் ஓரளவு சம பலத்துடன் இருக்கிறார்கள். இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள 23 கட்சிகளும் தேர்தலின் போது பல தொகுதிகளில் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் வெற்றி பெற முடிந்தது.

அந்த அடிப்படையில் பாராளுமன்றத்துக்குள்ளும் இணைந்து செயல்பட இந்தியா கூட்டமைப்பு தலைவர்கள் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்ற கூட்டத்தோடு தொடங்கும் முன்  கூட்டணியில் உள்ள 234 எம்பிக்களும் பாராளுமன்ற வளாகத்தில் ஒன்று திரண்டனர். 

எதிர்க்கட்சிகள் தங்களுக்கு இருக்கும் வலிமையை முதல் நாளே ஆளும் கட்சிக்கும்  நாட்டு மக்களுக்கும் காட்ட வேண்டும் என்பதற்காக வித்தியாசமான நடைமுறையை கையில் எடுத்தனர். பாராளுமன்றத்துக்கு வளாகத்தின் முன் காந்தி சிலையிலிருந்து கையில் சட்டப் புத்தகத்தை ஏந்தி அணிவகுத்து பாராளுமன்றத்துக்குள் சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Opposition parties mps Parliament with law books in hand


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->