ஒரே அணியில் கைக்கோர்த்த 16 எதிர்க்கட்சிகள்..நாடாளுமன்ற வளாகத்தில் மாபெரும் போராட்டம்...!! - Seithipunal
Seithipunal


அதானி குழுமம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் போராட்டம்..!!

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களின் ஒருவரான கௌதம் அதானி இந்தியா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் முதலீடு செய்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக அதானி குழுமம் அதிக வளர்ச்சி அடைந்ததால் அதிக அளவில் முதலீட்டாளர்கள் அதானி குழுமத்தில் முதலீடு செய்தனர். இதனால் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்தது.

உலக அளவில் இரண்டாவது பணக்காரராக உயர்ந்த சூழலில் கடந்த வாரம் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குறித்தான அறிக்கையை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கியது.

குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் அதானி குழுமத்தின் வளர்ச்சி குறித்து அந்த ஆய்வறிக்கையில் இடம் பெற்று இருந்தது. தனது நிறுவனத்தின் பங்குகளை அதிகமாக உயர்த்தி காட்டி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக ஆவணங்கள் வெளியிடப்பட்டது.

இதனால் இந்திய பங்குச் சந்தை ஆட்டம் கண்டது குறிப்பாக அதானி குழுமத்தின் பங்குகள் 50% வரை சரிந்தது. இதனால் அதானி குழுமத்தில் முதலீடு செய்த வாடிக்கையாளர்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகினர்.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. எதிர்க்கட்சிகள் அதானி குழுமம் தொடர்பான மோசடிகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் விவாதிக்க வேண்டும் என கூறியதால் நாடாளுமன்றம் முடக்கப்பட்டது.

இந்த நிலையில் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி அதானி குழுமத்தில் 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலில் செய்துள்ளது. மேலும் எஸ்பிஐ வங்கி அதானி குடும்பத்திற்கு அதிக அளவில் கடன் வழங்கி உள்ளது.

இதன் காரணமாக இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் அமைந்துள்ள எஸ்பிஐ வங்கியின் அலுவலகம் மற்றும் எல்ஐசி அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோன்று நாடாளுமன்றத்தின் வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ் திமுக உட்பட 16 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பதாகைகளுடன் அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Opposition parties protest in Parliament over Adani Group issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->