பஹல்காம் தாக்குதல்; சமூக வலைதளங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பதிவிட்ட 11 பேர் அதிரடி கைது..!
Pahalgam attack 11 people who posted in support of Pakistan on social media have been arrested in a crackdown
காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தளத்தில் 22-ந்தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்த கொடூர தாக்குதல் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலும், புல்வாமா தாக்குதலும் மத்திய அரசின் சதி தீட்டமே என பாகிஸ்தான் நாட்டிற்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்து பகிரப்பட்டு வைரலானது. அசாம் மாநிலத்தின் திங் தொகுதி எம்.எல்.ஏ-வான அமினுல் இஸ்லாம் என்பவரும் அந்தகைய கருத்துகளை சமூக வலைதளத்தில் வீடியோ வாக பதிவிட்டார்.
அதனை தொடர்ந்து, அவர் மீது அந்த மாநில போலீசார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில், அசாமில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்து பதிவிட்டு வந்த மேலும் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Pahalgam attack 11 people who posted in support of Pakistan on social media have been arrested in a crackdown