3 ஆண்டு சிறை தண்டனை, 3 லட்சம் ரூபாய் அபராதம்! மத்திய அரசு வெளியிட்ட எச்சரிக்கை!
Pahalgam attack India Pakistan Attari Wagah border
பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்தது. குறிப்பாக இந்தியாவில் தங்கியிருந்த பாகிஸ்தான் குடிமக்கள் துரிதமாக நாடு திரும்புமாறு உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவு அடிப்படையில், நேற்று பாகிஸ்தானியர்களுக்கான குறுகிய கால விசாக்கள் செல்லும் இறுதி நாள் ஆகும்.
மத்திய அரசு கடந்த வாரம் விசாக்களை இரத்து செய்ததாக அறிவித்ததைத் தொடர்ந்து, ஏப்ரல் 24 முதல் நான்கு நாட்களில் 9 தூதர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 537 பாகிஸ்தான் குடிமக்கள் இந்தியாவை விட்டு வெளியேறினர்.
அதேநேரம், 14 இந்திய தூதர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 850 பேர் பாகிஸ்தானிலிருந்து பஞ்சாப் எல்லைக் கடக்கும் வழியாக நாடு திரும்பியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன், குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு பின் இந்தியாவில் தங்கும் பாகிஸ்தானியர்கள் மீது, மூன்று ஆண்டு சிறை தண்டனை மற்றும் 3 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
Pahalgam attack India Pakistan Attari Wagah border