பாகிஸ்தான் ஏவுகணை சோதனை மட்டுமா? அல்லது போருக்கு தயாராகிறதா? - எல்லையில் போர் பதற்றம்...! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும், 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் நாட்டில் பெரும் அதிா்வலைகளாக மாறிய நிலையில், அட்டாரி - வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியா்கள் இந்தியாவுக்கு பயணிக்க தடை போன்ற அதிரடி அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது.

மேலும் முப்படைகளையும் தயார் நிலையில் இருக்க இந்தியா உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் கராச்சி கடலோரப் பகுதியில் இன்றும் நாளையும் தரையில் இருந்து இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டிருப்பதாக பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை இந்திய அமைப்புகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் ஏவுகணை சோதனையை மேற்கொள்வது வெறும் சோதனை மட்டுமா? அல்லது போருக்கு தயாராகிறதா? என்று இந்தியத் தூதரகத்திடம் கேள்வி எழுந்துள்ளது.

மேலும் பாகிஸ்தானின் போர் விமானங்களை எல்லையில் நிலைநிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து போர்ப் பதற்றம் எழுந்துள்ளது. இதனால் இந்திய மக்களும் அச்சத்தில் உள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pakistan just testing missiles Or preparing for war War tension border


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->