ஜம்மு காஷ்மீர் || எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் நபர் சுட்டுக்கொலை..!
Pakistani man who entered the border was shot dead in Jammu Kashmir
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் நபரை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பாவில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் வழக்கமாக எல்லை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நேற்று அதிகாலை 2.50 மணியளவில் பாகிஸ்தான் பகுதியிலிருந்து சம்பா செக்டரில் உள்ள மங்கு சாக் பார்டர் அவுட் போஸ்ட் அருகே சந்தேகத்திற்கிடமான ஒரு நபரின் நடமாட்டத்தை கண்டறிந்த எல்லை பாதுகாப்பு படையினர், அந்நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் அந்நபர் உயிரிழந்தார். மேலும் அந்த நபர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் வேறு யாரேனும் பதுங்கியுள்ளனரா என்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் இதற்கு முன்பாக புதன்கிழமை, பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்து ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளை கடத்தி மூன்று பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Pakistani man who entered the border was shot dead in Jammu Kashmir