4 பிள்ளைகளுடன் பப்ஜி காதலனை தேடிவந்த பாகிஸ்தான் பெண்.. மோசமான நிலையில், சினிமா வாய்ப்பு வழங்கும் தயாரிப்பாளர்.! - Seithipunal
Seithipunal


பப்ஜி காதலனை சந்திக்க பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சீமா ஹைதர் என்ற பெண் தன்னுடைய 4 குழந்தைகளுடன் நேபாளத்தின் வழியே இந்தியாவிற்குள் சட்டத்திற்கு எதிராக ஊடுருவிய நிலையில், தற்போது அவர் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா பகுதியில் வசித்து வருகிறார். அவர் தனது பப்ஜி காதலன் சச்சினை மறுமணம் செய்து கொண்டார். 

இது மட்டும் இல்லாமல் தனக்கு இந்திய குடியுரிமை வேண்டுமென அவர் இந்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் அவர் பாகிஸ்தான் உளவாளியாக இருக்க கூடுமோ என்ற சந்தேகத்தில் அவரை கண்காணித்து வருகின்றனர். இவர்களது காதல் விவகாரம் சில நாட்கள் மிகவும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.

தற்போது இவர்கள் இருவருக்கும் வேலை எதுவும் இல்லாமல் பொருளாதார பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அன்றாட உணவுக்கே இருவரும் மிகவும் சிரமப்படுவதாகவும், தங்களுக்கு யாராவது உதவ வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைக்கக்கூடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

இந்த நிலையில், தற்போது உத்தரபிரதேச மாநில நவநிர்மான் சேனா தலைவர் அமித் ஜானி, இந்த ஜோடிக்கு உதவி செய்ய முன் வந்துள்ளார். இது பற்றி அவர், "என்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாகின்ற படத்தில் சீமா ஹைதர், சச்சின் தம்பதிகள் நடிக்கவும், அவர்களது பொருளாதார நிலை இதன் மூலம் மேம்படவும் வாய்ப்பு வழங்க இருக்கிறேன்.

கொலை செய்யப்பட்ட உதய்பூர் தையல்காரர் கன்னையா லால் சாஹு பற்றிய திரைப்படம் நவம்பர் மாதத்தில் வெளியாக உள்ளது. சீமா ஹைதர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவியதை நான் ஆதரிக்கவில்லை. ஆனால், அவர்கள் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் கஷ்டப்படுவதை பார்த்து உதவ நினைக்கிறேன். அவர்களை படத்தில் நடிக்க வைப்பதற்கான வேலையை எனது உதவியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்." என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistani women in very poor Condition who search her pubg lover with 4 children


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->