பான்-ஆதார் இணைக்க நாளை கடைசி நாள்.. மத்திய அரசு எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்க நாளை கடைசி நாளாக நிர்ணயித்துள்ளது மத்திய அரசு.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இனிப்பது கட்டாயமில்லை உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மத்திய அரசு கடந்த 2019 மார்ச் மாதத்திற்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கால அவகாசம் கொடுத்திருந்தது.

அதன் பின்னர் பல்வேறு காரணங்களால் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்க நாளை (மார்ச் 31) கடைசி தேதியாக நிர்ணயித்துள்ளது.

மேலும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் இணைக்க தவறுபவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பான் எண்ணும் முடக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PAN and Adhar card link in tomorrow last day


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->