நாளை முதல் அனைத்து ரயில்களிலும் உணவு சேவை! ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.!
Pantry started in trains
அனைத்து ரயில்களிலும் நாளை முதல் மீண்டும் உணவு சேவை வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா தொற்று பரவல் காரனமாக அனைத்து ரயில்களிலும் உணவு வழங்கும் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் கொரோனா தொற்று குறைந்து வரக்கூடிய காலங்களில் படிப்படியாக ரயில்களில் உணவு வழங்கும் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது எனவும், கடந்த ஆண்டு 30 சதவீத ரயில்களில் உணவு வழங்கும் சேவை தொடங்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் மேலும் அதிகரிக்கப்பட்டு 80 விழுக்காடு ரயில்களில் உணவு வழங்கும் சேவை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டது எனவும், நாளை முதல் அனைத்து ரயில்களிலும் முழுவதுமாக உணவு வழங்கும் சேவை தொடங்கப்பட இருப்பதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.