80 கோடி மக்களுக்கு இலவசம்: அதிரடி அறிவிப்பு - மத்திய அரசு பட்ஜெட் 2024!
Parliament Budget Session 2024
பிரதமர் மோடியின் மூன்றாவது ஆட்சி காலத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சேர்த்தாராமன் தாக்கல் செய்து வருகிறார்.
அவரின் அந்த பட்ஜெட் தாக்கல் உரையில், "நாட்டில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது. மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் மீதான மக்களிஇந்த ன் நம்பிக்கைதான் 3வது தேர்தல் வெற்றி.
2024 பட்ஜெட்டில், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, நடுத்தர மக்களின் நலன், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும்.
9 முன்னுரிமைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது”
80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் 'பிஎம் கரீப் அன்ன யோஜனா' திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.
விவசாயத் துறைகளில் டிஜிட்டல் புரட்சி செய்ய அனைத்து கட்டமைப்புகளும் தயாராக உள்ளது.
32 தோட்டக்கலைகளில் 109 வகையான அதிக மகசூல் தரும் பயிர்கள் அறிமுகம்.
வேளாண்மைத் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
முத்ரா கடன் உதவித் திட்டத்தில் கடன் தொகை ₹20 லட்சமாக உயர்வு.
உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் உயர்கல்விக்காக ₹10 லட்சம் வரை கடனுக்கான நிதியுதவியை அரசு வழங்கும்
ஊரக வளர்ச்சிக்கு ₹2.66 லட்சம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு.
மேலும், சந்திரபாபு நாயுடுவின் கனவுத் திட்டமான பொலாவரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு நிதி வழங்குவதில் ஒன்றிய அரசு உறுதியாக உள்ளதாக பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும், பீகாரில் விமான நிலையம், மருத்துவக் கல்லூரிகள், விரைவுச் சாலைகள் அமைக்க பட்ஜெட்டில் நிதியுதவி, ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ₹15,000 கோடி ஒதுக்கப்படுவதாக பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
English Summary
Parliament Budget Session 2024