அதானி குழுமம் விவகாரத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியது...!! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவைச் சேர்ந்த ஹெண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஜனவரி 24ஆம் தேதி அதானி குழுமம் தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 

அந்த அறிக்கையில் அதானி குழுமம் பங்குச்சந்தைகளில் தங்களது பங்குகளின் மதிப்பை உயர்த்தி காட்டி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை அதானி குழுமம் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என மறுப்பு தெரிவித்த நிலையில் இது குறித்தான விளக்கத்தையும் ஹெண்டன்பர்க் நிறுவனம் அறிக்கையாக வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து பங்குச் சந்தைகளில் அதானி குழுமத்தின் பங்குகள் கடுமையாக சரிந்தது. உலக அளவில் பணக்காரப் பட்டியலில் 11வது இடத்திற்கு கௌதம் அதானே தள்ளப்பட்டார். 

இந்த நிலையில் அதானி குழுமம் மீது எழுந்த குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற சபாநாயகருக்கு இன்று கடிதம் அளித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை இரு அவைகளும் கூடியவுடன் அனைத்து நடவடிக்கைகளையும் ஒத்திவைத்து விட்டு அதானே குழும முறைகேடு குற்றச்சாட்டு குறித்த உடனடியாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை இரு அவை தலைவர்களும் ஏற்க மறுத்ததால் எதிர்க்கட்சி சேர்ந்த அனைத்து எம்பிகளும் நாடாளுமன்றத்தில் தொடர் முழக்கத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Parliament stalled over Adani Group issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->