தலைவர் போட்டியிலிருந்து பின் வாங்க மாட்டேன்! வேட்பாளரிடம் போட்டுக் கொடுத்த ராகுல் காந்தி! - Seithipunal
Seithipunal


ஆதரவாக இருப்பவர்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன்! அவர்களின் நம்பிக்கை தான் எனக்கு பலம்! 

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவருக்கான தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் கேரளாவைச் சேர்ந்த மூத்த தலைவர் எம்பி சசிதரூர் போட்டியிடும் நிலையில் அதே மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுதாகர் மற்றொரு போட்டியாளர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பகிரங்கமாக ஆதரவளித்துள்ளார்.

சசிதரூர் தமது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக திருவனந்தபுரம் வந்திருந்தார் அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அந்த பேட்டியில் அவர் கூறியதாவது "எனது வேட்பு மனுவை வாபஸ் பெற வலியுறுத்துமாறு ராகுல் காந்தியிடம் கட்சியின் தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதை ராகுல் காந்தியே என்னிடம் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டி இருக்க வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக ராகுல் காந்தி கூறிய வருவதை எனக்கு நினைவு படுத்தினார். காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை வாபஸ் பெற சொல்ல மாட்டேன் என்று என்னிடம் கூறினார்.

கட்சியின் பெரிய தலைவரிடம் இருந்து எந்த ஆதரவையும் நான் எதிர்பார்க்கவில்லை. நான் நாக்பூர், வார்தா மற்றும் ஹைதராபாத் சேர்ந்த கட்சி தொண்டர்களை சந்தித்தேன். அவர்கள் தான் என்னை போட்டியிட சொன்னார்கள். பின் வாங்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர். நான் அவர்களிடம் பின் வாங்க மாட்டேன் என்று உறுதி அளித்துள்ளேன்.

இதுவரை எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன். அது என் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. அந்த நம்பிக்கை தான் எனக்கு பலத்தை வழங்குகிறது. எனது ஆதரவாளர்களில் பெரும்பான்மையானோர் இளம் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள். அனைவரின் ஆதரவும் எனக்கு தேவை. யாரையும் நான் குறைவாக மதிப்பிடவில்லை.

யார் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. தங்கள் விருப்பம் மற்றும் நம்பிக்கைக்கு ஏற்ப வாக்களிக்கலாம். யார் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்யட்டும். எதிர்கால சவால்களை எதிர்கொள்ள அவரை தயார் செய்யலாம்" என சசிதரூர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

party leaders have asked Rahul Gandhi to insist on withdrawing sasitharur Rnomination


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->