விமானத்தில் பணிப்பெண்ணிடம் தவறாக நடந்த பயணி.! அதிரடி முடிவெடுத்த ஊழியர்கள்.! - Seithipunal
Seithipunal


சில நாட்களாகவே விமானங்களில் பலவிதமான அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதாவது, விமானத்தில் சக பயணிகள் மீது சிறுநீர் கழிப்பது, பயணிகள் இடையே கைகலப்பு உள்ளிட்ட பல சம்பவங்கள் நடந்துள்ளது. 

இதனால், பொதுமக்கள் மிகவும் அச்சத்திலேயே இருந்து வருகின்றனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வருவதற்குள் தற்போது மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

நாட்டின் தலைநகர் டெல்லியில் இருந்து ஐதராபாத்திற்கு செல்ல ஸ்பைஸ்ஜெட் விமானம் தயாராக இருந்தது. அப்போது விமானத்தின் பணிப்பெண்ணைத் முதியவர் ஒருவர் தவறான இடத்தில் தொட்டுள்ளார்.

 இதனால் ஆத்திரமடைந்த அந்த விமானப் பணிப்பெண் சம்பந்தப்பட நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, தனது கை வேண்டுமென்றே படவில்லை. இடம் சின்னதாக இருந்ததால் கை தெரியாமல் பட்டுவிட்டது என்று அந்த நபர் விளக்கம் அளித்துள்ளார். 

இதையறிந்த விமான ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை சமானாதப்படுத்தினர். இதையடுத்து, அந்த முதியவர் பணிப்பெண்ணிடம் தவறாக நடந்தது தொடர்பாக மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தார். இருப்பினும், அந்த முதியவரையும், அவருடன் வந்த மற்றொரு பயணியையும் விமான ஊழியர்கள் விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிட்டனர். 

இந்த நிலையில், சம்பவம் குறித்து ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் தெரிவித்ததாவது, "டெல்லி - ஐதராபாத் செல்வதற்கு தயாராக இருந்த விமானத்தில் பணிப்பெண்ணிடம் பயணி ஒருவர் தவறாக நடந்துகொண்டார். 

இந்த விவகாரம் குறித்துப் பொறுப்பு விமானிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர், அந்த நபர் விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டுப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்" என்றுத் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

passanger mis behaving to woman employe in spicejet plane


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->