நடுவானில் விமானத்தின் கதவைத் திறந்த பயணியால் பரபரப்பு.!
passanger open door in air india flight at mid air
இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் இருந்து நேற்று ஏர் இந்தியா விமானம் ஒன்று மும்பைக்கு புறப்பட்டு வந்தது. இதையடுத்து இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க குடிமகன் ஒருவர் விதிகளை மீறி விமானத்தில் புகை பிடித்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அவரிடம் புகை பிடித்தது தொடர்பாக கேட்டுள்ளனர். ஆனால் அந்த நபர் அதற்கு பதில் அளிக்காமல் விமான ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து விமான ஊழியர்கள் அந்த நபரை சமாதானம் செய்து இருக்கையில் அமர வைத்தனர். அதன் பின்னர் அந்த நபர் சிறிது நேரம் கழித்து விமானத்தின் கதவை திறப்பதற்கு முயன்றுள்ளார். இது அங்கிருந்த பயணிகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா ஊழியர் தெரிவித்ததாவது, "விமான விதிகளின் படி விமானத்தின் உள்ளே புகை பிடிக்க கூடாது. ஆனால் அந்த பயணி கழிவறைக்கு சென்றதும் விமானத்தில் எச்சரிக்கை அலாரம் அடிக்க துவங்கியுள்ளது.
அதன் படி, நாங்கள் கழிவறைக்குச் சென்று அவர்களின் கையில் இருந்த சிகிரெட்டை பிடுங்கி வீசினோம். ஆனால், அந்த நபர் கூச்சலிட்டுக்கொண்டே இருந்தார். அவரை எங்கள் ஊழியர்கள் சமாதானம் செய்தனர். அதன் பின்னர் அவர் திடீரென விமானத்தின் கதவை திறக்க தொடங்கினார்.
இதைப்பார்த்து சக பயணிகள் அச்சமடைந்ததால் ஊழியர்கள் அவரது கை கால்களை கட்டி இருக்கையில் அமர வைத்தனர். பின்னர் விமானம் மும்பை விமான நிலையத்திற்கு வந்தவுடன் அந்த நபரை ஊழியர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்" என்றுத் தெரிவித்தனர்.
English Summary
passanger open door in air india flight at mid air