உ.பி : ஆம்புலன்ஸ் செல்ல வழிவிடாத பாஜக பிரமுகர்.! துடிதுடித்து உயிரிழந்த நோயாளி.!
patient died ambulance in uttar pradesh for bjp executive block road
உ.பி : ஆம்புலன்ஸ் செல்ல வழிவிடாத பாஜக பிரமுகர்.! துடிதுடித்து உயிரிழந்த நோயாளி.!
உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள சீதாபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் சந்திரா. இவர் கடந்த ஒன்றாம் தேதி மார்பு வலியால் அபகுதியிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரை உடனடியாக லக்னோ மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும்படி அறிவுறுத்தினர்.
அதன் படி அவர்கள் அவசர அவசரமாக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் புறப்பட்டுச் சென்றனர். அப்போது, அப்பகுதி பாஜக பிரமுகர் உமேஷ் மிஸ்ரா தனது காரை சாலையில் நிறுத்திய படி சென்றுவிட்டார்.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் எவ்வளவு ஒலி எழுப்பியும் அவர்கள் காரை எடுக்காததால், சுமார் முப்பது நிமிடங்களுக்கு மேல் அந்த இடத்தைவிட்டு ஆம்புலன்ஸால் நகர முடியவில்லை, இதில், சுரேஷ் சந்திரா ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்தார்.
சிறிது நேரம் கழித்து காரை எடுக்க வந்த பாஜக தலைவரிடம் உயிரிழந்தவரின் உறவினர்கள் கேள்வி எழுப்பினர். பாஜக பிரமுகர் உமேஷ் மிஸ்ரா, உயிரிழந்தவரின் மைத்துனரை அவதூறு வார்த்தைகளால் பேசி, அவரை போலீஸ் வழக்குகளில் சிக்க வைப்பதாகவும், நினைத்தால் உன்னை இங்கேயே முடித்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இந்த சம்பவம் நடைபெற்ற போது சில போலீஸாரும் அங்கே இருந்தனர். ஆனால் அவர்கள் யாரும் இதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். அதன் பின்னர் உமேஷ் மிஸ்ரா அங்கிருந்து காரில் தப்பித்துச் சென்றார்.
இதனை அங்கே இருந்த மக்கள் வீடியோவாக எடுத்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். பாஜக பிரமுகரின் அராஜகம் மற்றும் காவல்துறையின் செயலற்ற தன்மைக்காக கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றது.
English Summary
patient died ambulance in uttar pradesh for bjp executive block road