பார்க்கிங் செய்வதில் கலவரம்! துப்பாக்கி சூடு, இருவர் பலி! - Seithipunal
Seithipunal


பிஹார் மாநிலம், பாட்னா மாவட்டம், ஜேதுலி கிராமத்தில் வாகன நிறுத்துமிட தகராறில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட வன்முறை மோதலில் சில கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதல் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் காயமடைந்துள்ளனர். முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். 

தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கலவர சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளை தேடும் பணி நடந்து வருவதாக பாட்னா எஸ்எஸ்பி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில், இரு குழுக்களுக்கு இடையேயான சண்டையில் ஒரு குழுவின் துப்பாக்கிச் சூட்டில் வன்முறையாக மாறியது. 

இதில் 5 பேர் காயமடைந்தனர். 2 இறப்புகள் பற்றிய தகவல் உள்ளது. கிராம தலைவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். நிலைமை சீராகும் வரை போலீசார் முகாமிட்டுள்ளனர். 

குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் வீடு தீ வைத்து கொளுத்தப்பட்ட நிலையில், தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 

போலீஸ் எஸ்ஐ கண்முன்னே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக உள்ளூர்வாசிகள் சிலர் தெரிவித்தனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Patna A fight two groups escalated into violence


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->