இரங்கல் செய்தி பதிவால் சர்ச்சையில் சிக்கிய பேடிஎம் சி.இ.ஓ.!
paytym ceo vijay sekar sharma create controversy for rattan tata condoles post
பிரபல இந்திய தொழிலதிபரும், டாடா நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் காலமானார்.
இவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு பேடிஎம் சிஇஓ விஜய் சேகர் சர்மா இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:-
"அடுத்த தலைமுறையின் தொழில் முனைவோர் இந்தியாவின் மிகவும் எளிமையான தொழிலதிபருடன் தொடர்பு கொள்வதைத் தவறவிடுவார்கள். வணக்கங்கள், ஐயா. ஓகே, டாடா பை பை" என்று பதிவிட்டிருந்தார். இவரது பதிவைக் கண்ட நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அதாவது, செய்திகளில் இருப்பதற்கான வாய்ப்பை ஒருபோதும் தவறவிடாதீர்கள் என ஒரு தரப்பினரும், இது பொருத்தமற்றது என்று மற்றொரு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, பேடிஎம் சிஇஓ விஜய் சேகர் சர்மா சர்ச்சையை ஏற்படுத்திய அந்தப் பதிவை தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து உடனடியாக நீக்கினார்.
English Summary
paytym ceo vijay sekar sharma create controversy for rattan tata condoles post