எவரெஸ்ட் மேல் ஏறி நின்ற மாற்றுத்திறனாளி.. சோதனையும் சாதனையாக மாற்றிய தன்னம்பிக்கை! - Seithipunal
Seithipunal


ஹரியானாவைச் சேர்ந்த தின்கேஷ் கவிஷிக் என்ற 30 வயதான இளைஞர், தனது 9 வயதில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக தனது இரண்டு கால்கள் மற்றும் ஒரு கையை இழந்துள்ளார். இதையடுத்து கோவாவிற்கு தனது பெற்றோருடன் குடிபெயர்ந்த தின்கேஷ், அங்கு உடற்தகுதி பயிற்சியாளராக தன் வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். 

இந்நிலையில் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயற்கை கை கால்களைப் பொருத்திக்கொண்ட தின்கேஷ், எவரெஸ்ட் மலையில் ஏறுவதற்கான முயற்சியும், பயிற்சியும் மேற்கொள்ள ஆரம்பித்தார். இதையடுத்து கடந்த மே 11ம் தேதி, கடல் மட்டத்தில் இருந்து 17598 அடி உயரத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் மலையடிவாரத்தை அடைந்துள்ள இவர், தனக்கு இது மிகப்பெரிய சவாலாக இருந்தது என்று கூறியுள்ளார். 

தொடர்ந்து இதுகுறித்து கூறிய தின்கேஷ், "நான் ஒரு உடற்தகுதி பயிற்சியாளர் என்பதால் எனக்கு மலையேறுவது எளிதாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் எனக்கு இது பெரும் சவாலாக இருந்தது. மலையேறும்போது எனது உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. ஆனால் இதை செய்து முடிக்க வேண்டும் என்ற மனவலிமை மட்டும் எனக்குள் தொடர்ந்து இருந்தது" என்று கூறியுள்ளார். 

இந்நிலையில், எவரெஸ்ட் சிகரத்தில் மனவலிமையுடன் ஏறி சாதனை படைத்த தின்கேஷ் கவிஷிக்கிற்கு கோவாவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சங்கம் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Person with disability climbed on Mount Everest


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->