கர்நாடகாவில் வெளுத்துவாங்கும் கனமழை- இன்று முதல் 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


பெங்களூரு: வளிமண்டல சுழற்சியின் தாக்கத்தால் பெங்களூரு மற்றும் அதன் சுற்று மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. பெங்களூரு நகரின் ஆர்.ஆர். நகர், கெங்கேரி, விஜயநகர், ராஜாஜிநகர், பேடராயனபுரா, சந்திரா லே-அவுட், நாகரபாவி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. 

மழைநீர் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், சுரங்க பாதைகள் மற்றும் ரெயில்வே பாதைகளில் தண்ணீர் தேங்கி நின்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சும்மனஹள்ளி ஜங்ஷன், பாகலூர் கிராஸ், ஒசூர் மெயின் ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் நீர் தேங்கி நின்றது.

இதனால் தீபாவளிக்காக பொருட்கள் வாங்க விரைந்த பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். குறிப்பாக சிட்டி மார்க்கெட்டில் மழையால் காய்கறி, பூக்கள் மற்றும் பழங்கள் வாங்க வந்தவர்களுக்கு பிரச்சனைகள் ஏற்பட்டது. 

மேலும், விஜயநகர், ஹர்பனஹள்ளி, ஹாவேரி, தார்வாட், சிக்கமகளூர் உள்ளிட்ட பல இடங்களில் சென்டிமீட்டரில் அளவான மழை பதிவாகியுள்ளது. இன்று முதல் நவம்பர் 3-ந்தேதி வரை ஷிமோகா, ராமநகர், மைசூரு, மாண்டியா, குடகு, சிக்கமகளூரு மற்றும் சாம்ராஜ்நகர் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy rains in various districts of Karnataka Yellow alert for 3 days from today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->