சென்னை வருபவர்கள் கவனத்திற்கு!....கிளம்பாக்கத்தில் சிறப்பு மின்சார ரெயில்கள்!...தெற்கு ரயில்வே அறிவித்த முக்கிய அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து பேருந்து மற்றும் ரயில் மூலமாக சுமார் 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும் சாலை மார்க்கமாக சொந்த கார்கள் மற்றும் வாடகை கார்களிலும், மேலும் சிலர் விமானங்களிலும் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

தொடர்ந்து அவர்கள் வரும் திங்கிள்கிழமை சென்னை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, வெளியூர்களில் இருந்து கிளாம்பாக்கம் வரும் பொதுமக்கள் அங்கிருந்து சென்னையின் வெவ்வேறு பகுதிகளுக்கு செல்லும் வசதியாக வரும் திங்கள்கிழமை அதிகாலை 4 மணி முதல் புறநகர் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அந்த வகையில், காட்டாங்குளத்தூர் முதல் தாம்பரம் ரெயில் நிலையம் வரை சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும், இந்த சிறப்பு ரெயில்கள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகாமையிலுள்ள பொத்தேரி ரெயில் நிலையத்தில் கூடுதல் நேரம் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Attention visitors to chennai special electric trains at kilambakkam important announcement announced by southern railway


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->