2023 ஆம் ஆண்டிற்கான புக்கர் பரிசுத் தொகை பட்டியலில் பெருமாள் முருகனின் 'பைர்' நாவல் தேர்வு.!
perumal murugan baibar novel selected in booker price competition
உலகில் உயரிய விருதுகளில் ஒன்று சர்வதேச புக்கர் பரிசு. இந்த விருது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, இங்கிலாந்திலோ அல்லது அயர்லாந்திலோ பதிப்பிக்கப்பட்ட நாவலுக்கு ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுகிறது.
50 ஆயிரம் பவுண்ட்ஸ் பரிசுத்தொகை கொண்ட இந்த விருது எழுத்தாளருக்கும், மொழி பெயர்த்தவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இந்த நிலையில், நடப்பாண்டிற்கான சர்வதேச புக்கர் பரிசுக்கான போட்டிக்கு தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய 'பைர்' நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த நாவலை அனிருத்தன் வாசுதேவன் என்பவர் மொழிபெயர்த்துள்ளார். இந்த கதையின் கரு "வெவ்வேறு சாதியை சேர்ந்த காதல் ஜோடி வீட்டை விட்டு ஓடிச்செல்வது பற்றியும், ஆணவ கொலை பற்றியும்" அமைந்துள்ளது.
இந்த 'பைர்' நாவல் பன்னிரண்டு எழுத்தாளர்களின் நாவல்களுடன் போட்டியிடுகிறது. இது குறித்து பெருமாள் முருகன் தெரிவித்ததாவது, "புக்கர் பரிசுத் தொகைக்கு தனது நாவல் தேர்வு செய்யப்பட்டதற்கு மிகுந்த மகிழ்ச்சி.
இந்த நாவல், தன்னுடைய மிக முக்கியமான புத்தகம்" என்று அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு புக்கர் பரிசை "கீதாஞ்சலி ஸ்ரீ" என்ற இந்திய எழுத்தாளர் வென்றது குறிப்பிடத்தக்கது ஆகும்.
English Summary
perumal murugan baibar novel selected in booker price competition