மோடியின் மீது தாக்குதல் நடத்த பிஎப்ஐ அமைப்பு திட்டம்..!
PFI attack plan in prime minister modi
பீஹார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் நடந்த பேரணியில் பிரதமர் நரேந்திர மோடியின் மீது தாக்குதல் நடத்த பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு திட்டமிட்டுள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டிவுள்ளது.
மேலும், உத்திரபிரதேசத்தில், பதற்றம் நிறைந்த பகுதிகள் மற்றும் தனி நபர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக பிஎப்ஐ அமைப்பு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை சேகரித்துள்ளது.
இதுகுறித்த செய்தி, கேரளாவில் கைது செய்யப்பட்ட பிஎப்ஐ உறுப்பினர் ஷபீக் பயீத்திடம் கைப்பற்றப்பட்ட குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த குறிப்பில், கடந்த ஜூலை மாதம் 12ல் பிரதமர் மோடி பாட்னாவிற்கு வருகை புரியும் போது தாக்குதல் நடத்துவதற்காக பயிற்சி முகாம்களை பிஎப்ஐ அமைப்பு நடத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமலாக்கத்துறை, பல ஆண்டுகளாக, "பிஎப்ஐ அமைப்பு சேகரித்த 120 கோடி ரூபாய் பணம் பெரும்பாலும் ரொக்கமாகவே வசூலிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்பட்டிருக்கலாம்" என்று குற்றம்சாட்டியுள்ளது.
டில்லியில், பிஎப்ஐ அலுவலக பொறுப்பாளர்களான பெர்வேஷ் அகமது, இலியாஸ், அப்துல் முகீத் ஆகியோரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடந்த 2018 ம் ஆண்டு முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியது.
English Summary
PFI attack plan in prime minister modi