PFI தடை என்பது அரசியல் சுயநல நடவடிக்கை! மாயாவதி ட்விட்! - Seithipunal
Seithipunal


பிஎஃப்ஐ போன்று ஏன் ஆர்எஸ்எஸ்-ஐ தடை செய்யக்கூடாது?

நாடு முழுவதும் ஆப்ரேஷன் ஆக்டோபஸ் என்ற தீவிரவாத தடுப்பு சோதனை கடந்த ஒரு வாரமாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சிக்கு சொந்தமான இடங்களில் சோதனையை என்ஐஏ மற்றும் அமலாக்கத்துறையினர் இணைந்து சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது 356 பேர் கைதானார்கள். அதில் 11 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மேலும் கேரளா, புதுடெல்லி, தெலுங்கானா உட்பட 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் சோதனை நடைபெற்றது. 

இந்த அமைப்புகள் வெளி உலக பார்வைக்கு சமூக அமைப்பாகவும் அரசியல் அமைப்பாகவும், கல்வி ரீதியாக ஏற்பாடு செய்யக்கூடிய அமைப்பாகவும் காட்டிக்கொண்டு உள்ளனர். உள்ளுக்குள் அவர்களுக்கு என மறைமுக கோட்பாடுகள் உள்ளன. அக்கோட்பாடு என்னவென்றால் நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, சமூக நல்லிணக்கத்தை கெடுப்பது, இந்தியாவின் பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும் எதிராக செயல்படுவது போன்ற விஷயங்களில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்" என் மத்திய அரசு அறிவித்து 5 ஆண்டுகளுக்கு அந்த அமைப்பு மற்றும் அதன் துணை அமைப்புகளை தடை செய்தது. 

இன்னலையில் பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவரும் உத்திரபிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான மாயாவதி பிஎஃப்ஐ மற்றும் அதன் துணை அமைப்பாளர் மீதான ஐந்து ஆண்டு தடைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சட்டசபை தேர்தலுக்கு முன்பு பிஎஃப்ஐ மற்றும் அதன் எட்டு துணை அமைப்புகளுக்கு நாடு தழுவிய அளவில் அரசாங்கம் தடை விதித்து இருப்பது அரசியல் சுயநலம் கொண்ட நடவடிக்கை. மக்கள் மத்தியில் திருப்தியை விட அமைதியின்மை அதிகமாக உள்ளது.

இந்த தடை அரசாங்கத்தின் நோக்கங்களில் உள்ள குறைபாடு. அதனால் தான் எதிர்க்கட்சிகளும் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதனால் தான் எதிர்க்கட்சிகள் ராசிய ஸ்வயம்சேவ் சங்கத்திற்கு (RSS) தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். உள்நாட்டு பாதுகாப்பிற்கு பிஎஃப்ஐ அச்சுறுத்தல் என்றால் இது போன்ற பிற அமைப்புகளை ஏன் தடை செய்யக்கூடாது? என கேள்வி எழுப்பி ட்விட் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PFI ban is a politically selfish move Mayawati tweet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->