#77_வது_சுதந்திர தினம் : மன்மோகன் சிங்கின் சாதனையை சமன் செய்த மோடி.!  - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லியில் உள்ள தலைவர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். டெல்லி ராஜ் கோட்டில் இருக்கும் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

இதன் பின்னர் சற்று நேரத்தில் டெல்லி செங்கோட்டைக்கு விரைந்த மோடி, அங்கு தேசிய கொடியை ஏற்றிவிட்டு நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இன்று சுதந்திர தின விழாவில் கொடியேற்றியதன் மூலமாக பிரதமர் மோடி தொடர்ந்து 10 ஆண்டுகள் சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றிய முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங்கின் சாதனையை சமன் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். 

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பான கடைசி சுதந்திர தின விழா கொண்டாட்டம் என்பதால் பிரதமர் மோடி ஏதேனும் முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pm modi beat Man mohan singh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->