பொதுக்கூட்டத்தில் உயிரிழந்த தொண்டர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்.! - Seithipunal
Seithipunal


தெலுங்கு தேச கட்சியின் தலைவரும் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு கந்துகுரு அருகே நெல்லூர் பகுதியில் பொதுக்கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்திருந்தார். 

அந்த பொதுக்கூட்டத்தில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர். இதனால் அதிகளவு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி எட்டு பேர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்தனர். 

உடனடியாக காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன் பின்னர் சந்திரபாபு நாயுடு அவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்தார். 

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு அறிவித்து, அவர்களுடைய குழந்தைகளின் கல்விக்கு என்டிஆர் அறக்கட்டளை நிதியளிக்கும் என்று தெரிவித்தார். 

இந்நிலையில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது, "ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடந்த அசம்பாவிதத்தால் வேதனை அடைந்தேன். 

உயிரிழந்த குடும்பங்களுக்கு, உதவித் தொகையாக, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு இரண்டு லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM modi condoles to peoples dird for over croud in rally


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->