செகந்திராபாத்-திருப்பதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்... கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..! - Seithipunal
Seithipunal


தெலங்கானா மாநிலத்தில் ரூ.11,360 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தெலுங்கானாவிற்கு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று செகந்திராபாத்-திருப்பதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை செகந்திராபாத் ரயில் நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து ரயிலில் பயணித்த பிரதமர் மோடி, பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். மேலும் செகந்திராபாத் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு பணிக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்த செகந்திராபாத்-திருப்பதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், மூன்று மாதங்களுக்குள் தெலுங்கானாவிலிருந்து தொடங்கப்படும் இரண்டாவது வந்தே பாரத் ரயிலாகும். இது இரு நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தை கிட்டத்தட்ட மூன்றரை மணிநேரம் குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி ஐதராபாத்தில் உள்ள பரேட் மைதானத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் எய்ம்ஸ் பீபிநகருக்கு அடிக்கல் நாட்டுகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi flags off Secunderabad Tirupati Vande Bharat Express


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->