5 ஆண்டுகளில் ''5 பிரதமர்கள்''...  இதுதான் இந்தியா கூட்டணி திட்டம் - பிரதமர் மோடி பகீர் குற்றச்சாட்டு.! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி இன்று பீகார், பாட்லிபுத்ராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பேசினார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, 

2024 ஆம் ஆண்டு தேர்தலில் ஒரு புறம் உங்களுக்காக 24 மணி உழைக்கும் மோடி, மறுபுறம் உங்களிடம் பொய் சொல்லும் இந்தியா கூட்டணி உள்ளது. 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த பாரத் ஆக்குவதில் நான் தொடர்ந்து 24 மணி நேரமும் உழைத்துக் கொண்டிருக்கிறேன். 

இந்தியா கூட்டணியை நாட்டு மக்கள் வெளியேற்றி உள்ளனர். அதனால்தான் இந்தியா கூட்டணி என்னை தவறாக பேசுவதில் மும்முரனாக இருக்கிறது. 

5 ஆண்டுகளில் அவர்கள் ஐந்து பிரதமர்களை உருவாக்கும் திட்டத்தில் இருக்கின்றனர். இந்தியாவில் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு இருக்காது என நமது அரசியல் அமைப்பு தெரிவிக்கிறது. 

டாக்டர் அம்பேத்கரும் இதை தான் தெரிவித்துள்ளார். ஆனால் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் இட ஒதுக்கீட்டை மதத்தின் அடிப்படை வழங்க விரும்புகின்றது. 

இந்தியா கூட்டணி தலைவர்கள் வகுப்புவாதிகளாக இருக்கின்றனர். நாம் உயிருடன் இருக்கும் வரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடம் இருந்து இட ஒதுக்கீட்டை கொள்ளையடிக்க இந்தியா கூட்டணியை அனுமதிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi indictment India alliance


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->