லடாக்கில் ஏற்பட்ட வாகன விபத்தில் 7 ராணுவ வீரர்கள் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்.!
Pm Modi mourns the loss of lives of soldiers
லடாக்கில் ஏற்பட்ட வாகன விபத்தில் 7 ராணுவ வீரர்களின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
லடாக் பர்தாபூர் என்ற இடத்திலிருந்து ஹனிப் என்ற இடத்துக்கு 26 இராணுவவீரர்கள் வாகனத்தில் சென்றுள்ளனர்.
அப்பொழுது லடாக்கின் துர்த்க் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 19 ராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், "லடாக்கில் நடந்த வாகன விபத்தில் எங்களுடைய துணிச்சலான ராணுவ வீரர்களை இழந்து விட்டோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். பாதிக்கப்பட்டோருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படுகின்றன" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Pm Modi mourns the loss of lives of soldiers