திருமண வரவேற்பு இதழில் மோடியின் பெயர் - வசமாக சிக்கிய மணமகன்.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் உள்ள தட்சிண கன்னடா மாவட்டம் உப்பினங்கடி பகுதியில், திருமணத்திற்கு அச்சடித்த வரவேற்பிதழில் "பிரதமர் மோடியை மீண்டும் தேர்ந்தெடுப்பதே தம்பதிக்கு நீங்கள் அளிக்கும் சிறந்த பரிசாக இருக்கும்" என இடம் பெற்றிருந்தது. இதனை, தேர்தல் ஆணையத்திடம் மணமகனின் உறவினரே புகாராக கொண்டு சென்றுள்ளார்.

அந்தப் புகாரையடுத்து, தேர்தல் ஆணைய அதிகாரிகள் மணமகனின் வீட்டுக்கு நேரில் சென்றபோது அவர்களிடம், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே, மார்ச் 1-ந்தேதி திருமண வரவேற்பிதழ் அச்சடிக்கப்பட்டது. அந்த வரியானது, பிரதமர் மோடி மற்றும் நாட்டின் மீது கொண்ட அன்பால் சேர்க்கப்பட்டது என்று விளக்கம் அளித்திருக்கின்றனர்.

அவர் விளக்கம் அளித்தபோதும், தேர்தல் ஆணையம் கடந்த 26-ந்தேதி போலீசில் புகார் ஒன்றை அளித்தது. இதனை தொடர்ந்து எப்.ஐ.ஆர். ஒன்று பதிவு செய்யப்பட்டு, திருமண வரவேற்பிதழை அச்சடித்த உரிமையாளரிடமும் தேர்தல் ஆணையம் மற்றும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi name include marriage invitation in karnataga


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->