காங்கிரஸ் நாட்டை தனது சொத்தாக நினைக்கிறது - பிரதமர் மோடி தாக்கு.!
PM Modi says congress considers country property
மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் ஆறாவது கட்டமாக இன்று 58 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் பீகார், பக்சார் தொகுதியின் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், காங்கிரஸ் கட்சி இந்த நாட்டை தங்களுடைய சொத்தாக கருதுகிறது. அதற்கு ராகுல் காந்தி வாரிசாகவும் இணைகிறது. ஐந்து ஆண்டுகளில் 5 பிரதமர்களை உருவாக்க இந்தியா கூட்டணி நினைக்கிறது.
இவ்வளவு பெரிய நாட்டை இப்படி வழி நடத்த முடியுமா. இந்தியா கூட்டணி கலாச்சாரத்தின் ஊழல் ஊறிப் போய் உள்ளது. இந்தியா கூட்டணி தங்களது வாக்கு வங்கியை பெறுவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யும்.
500 ஆண்டுகளுக்கு பிறகு உள்ள கனவுகள் நினைவாகும் வகையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று நாடே கொண்டாட்டத்தில் இருந்தது.
அப்பொழுது சிலர் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வராமல் தவிர்த்தனர். இந்தியா கூட்டணியை சேர்ந்தவர்கள் புனித காரியங்களுக்கு தடையை ஏற்படுத்துகின்றனர் என தெரிவித்துள்ளார்.
English Summary
PM Modi says congress considers country property