காங்கிரஸ் ''பாரத அன்னை''யை அவமதிக்கிறது.. பிரதமர் மோடி பகீர் குற்றசாட்டு.! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி இமாச்சலப் பிரதேசம், சிம்லாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, 

ஐந்தாம் கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளது. பா.ஜ.க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரவுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் உயரமான மலைகள் எனது உற்சாகத்தை உயர்வாக வைத்திருக்க எனக்கு கற்றுத் தந்துள்ளது. 

இந்த உயரமான மலைகள் பெருமையுடன் தலை உயர்த்திப் பிடிக்க கற்றுக் கொடுத்தது. பாரத அன்னையை இழிவு படுத்துவதை என்னால் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. 

 

ஆனால் காங்கிரஸ் பாரத அன்னையை அவமதிக்கிறது. காங்கிரஸின் சகாப்தத்தை பார்த்து இருக்கிறோம். நாட்டில் பலவீனமான அரசாங்கம் இருந்த போது அதனை பாகிஸ்தான் சாதகமாக்கி கொண்டது. 

பொதுப்பிரியிலும் ஏழைகள் இருக்கின்றனர் என்று 60 ஆண்டுகளாக காங்கிரஸ் நினைக்கவில்லை. அவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். பொது பிரிவு ஏழை மக்களுக்கு 10 சதவீதம் பல்வேறு இடங்களில் வாய்ப்புகளை பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi says congress insults mother India


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->