காங்கிரஸ் - பாகிஸ்தான்: வெட்ட வெளிச்சத்துக்கு வந்த தொடர்பு... பிரதமர் மோடி தாக்கு.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஃபவத் சவுத்ரி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை புகழ்ந்திருப்பதன் மூலம் காங்கிரஸ்-பாகிஸ்தான் இடையேயான தொடர்பு வெளிச்சத்துக்கு வந்திருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். 

குஜராத், ஆனந்த் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் காங்கிரஸ் பலவீனமடைந்த போதெல்லாம் பாகிஸ்தான் நாட்டு தலைவர்கள் கட்சிக்காக பிரார்த்தனை செய்தனர். 

நாட்டின் பிரதமராக ராகுல் காந்தி வரவேண்டும் எனவும் அவர்கள் விரும்புகின்றனர். ஒற்றுமையை பாருங்கள் இந்தியாவில் காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்து விட்டது. 

அதில் ஒரு நகைச்சுவை என்னவென்றால் இங்கே காங்கிரஸ் மரணித்து கொண்டிருக்கிறது அங்கே பாகிஸ்தான் அழுகிறது. தற்போது பாகிஸ்தான் தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்காக பிரார்த்தனை மேற்கொள்கிறார்கள். 

பாகிஸ்தான், ராகுல் காந்தியை நாட்டின் பிரதமராக வேண்டும் என ஆர்வத்துடன் உள்ளனர். இதன் மூலம் பாகிஸ்தான்-காங்கிரஸ் இடையேயான தொடர்பு வெளிச்சத்துக்கு வந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi says Congress Pakistan relationship 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->