வறுமைக்கு எதிரான ஆயுதமாக தொழில்நுட்பத்தை இந்தியா பயன்படுத்துகிறது - பிரதமர் மோடி - Seithipunal
Seithipunal


பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டை இன்று காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மூன்று நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் 9 முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. 

இந்நிலையில் காணொலி வாயிலாக மாநாட்டை தொடங்கி வைத்த பிறகு பேசிய பிரதமர் மோடி, வறுமைக்கு எதிரான போரில் தொழில்நுட்பத்தை ஆயுதமாக இந்தியா பயன்படுத்துகிறது என்றார். 

மேலும் முதலீட்டாளர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் நாடாக இந்தியா அறியப்படுகிறது என்றும், 2021- ஆம் ஆண்டில் இருந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை இருமடங்கு ஆகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் 575-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த புத்தொழில் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. மேலும் உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிபுணர்கள் கலந்து கொள்கிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pm Modi says India using technology as weapon against poverty


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->