ஜி20 உச்சி மாநாடு: பல முக்கிய சர்வதேச விவகாரங்கள் பற்றி விவாதிக்கப்படும் - பிரதமர் மோடி - Seithipunal
Seithipunal


இந்தோனேசியாவின் பாலி நகரில் நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டு பாலி நகருக்கு செல்கிறார். 

இந்த மாநாட்டில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம் சுகாதாரம் ஆகிய மூன்று முக்கிய அமர்வுகளில் பிரதமர் கலந்து கொள்ள உள்ளார். மேலும் இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் 3 நாள் பயணத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், ஜி-20 தலைவர்களுடன் வளர்ந்து வரும் உலகளாவிய வளர்ச்சி, உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் உருமாற்றம் உள்ளிட்ட பல முக்கிய சர்வதேச விவகாரங்கள் பற்றி விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்படும். 

மேலும் இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, இதில் கலந்து கொள்ளும் பல நாட்டு தலைவர்களையும் நான் நேரில் சந்தித்து, இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிகள் பற்றி அவர்களுடன் மறுஆய்வு செய்யப்படும் என்றார்.

இதைத்தொடர்ந்து, பாலியில் நாளை நடைபெற கூடிய வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய சமூக மக்களிடையே உரையாற்ற இருப்பதாகவும், ஜி-20 மாநாட்டின் நிறைவு நிகழ்வாக ஜி-20 அமைப்பின் தலைமைத்துவம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இது நமது நாட்டுக்கும் மற்றும் மக்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த தருணம் என பிரதமர் மோடி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi says Many important international issues will be discussed G20 summit


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->